|
||||||||
ஒரு கவிஞனைப் போன்று திரிகின்ற அற்பனுக்கு |
||||||||
ஆயிரம் மரங்களை உன்னால் உருவாக்க முடியுமா?
கேவலம் ஒரு புல்லை?
ஏன், ஒரு சிறு பூச்சியை?
பிறகு,
உன் கால்கள் அந்தரத்தில் நிற்பது ஏன்?
மலை போல உனது தலை
வீங்கி வெடிப்பது ஏன்?
நேற்று என் உடையில்
ஒரு குருவி எச்சமிட்டுப் போனது.
அதுவாய்த்தான் நான் உன்னை நினைக்கிறேன்.
என் கட்டிலின் ஓரத்தில் குடித்தனம் நிகழ்த்தும்
வாலறுந்த பல்லியாய்த்தான்
உன் தகுதியைக் கணிக்கிறேன்.
அற்பனே! என் இரக்கத்திற்குரிய
அற்பனே!
உனக்கு வால் உண்டென்று நினைப்பதுதான் வெட்கம்.
உன் வால்
மிகவும் சிறியது.
அதில் சிறு குழந்தையின் உரோமத்தின் அளவிற்காவது
உரோமங்கள் இல்லை.
எப்படி உன் வால் ஆரோக்கியமானது என்று கருதுவாய்?
சிறு கடதாசு சுமக்க பலமற்ற உன் வாலால்
எப்படி என்னைப் பார்த்து முறுக்கி
வீரத்தைக் காண்பிப்பாய்?
நீ குப்பை கூளத்துள் கைவிட்டுத் தேடு
என் கவிதையின் மலம் கிடக்கும்.
புசி,
உன் மூளைக்கும் போஷாக்கு
திமிருக்கும் மருந்து.
அற்பனே! என் இரக்கத்திற்குரிய கொட்டைவால் அற்பனே!
எனக்குத் திமிரில்லை,
உனக்காய் வாய் விரித்தேன்.
பொறு, மன்னி, இல்லையென்றால் மீண்டும் வால்முறுக்கித்
தோற்றுப்போ,
திரும்பவும் கவிதையின் மலம் தருவேன்.
புசிக்க.
ஆயிரம் மரங்களை உன்னால் உருவாக்க முடியுமா? கேவலம் ஒரு புல்லை? ஏன், ஒரு சிறு பூச்சியை?
பிறகு, உன் கால்கள் அந்தரத்தில் நிற்பது ஏன்? மலை போல உனது தலை வீங்கி வெடிப்பது ஏன்?
நேற்று என் உடையில் ஒரு குருவி எச்சமிட்டுப் போனது. அதுவாய்த்தான் நான் உன்னை நினைக்கிறேன். என் கட்டிலின் ஓரத்தில் குடித்தனம் நிகழ்த்தும் வாலறுந்த பல்லியாய்த்தான் உன் தகுதியைக் கணிக்கிறேன்.
அற்பனே! என் இரக்கத்திற்குரிய அற்பனே! உனக்கு வால் உண்டென்று நினைப்பதுதான் வெட்கம்.
உன் வால் மிகவும் சிறியது. அதில் சிறு குழந்தையின் உரோமத்தின் அளவிற்காவது உரோமங்கள் இல்லை.
எப்படி உன் வால் ஆரோக்கியமானது என்று கருதுவாய்? சிறு கடதாசு சுமக்க பலமற்ற உன் வாலால் எப்படி என்னைப் பார்த்து முறுக்கி வீரத்தைக் காண்பிப்பாய்?
நீ குப்பை கூளத்துள் கைவிட்டுத் தேடு என் கவிதையின் மலம் கிடக்கும். புசி, உன் மூளைக்கும் போஷாக்கு திமிருக்கும் மருந்து.
அற்பனே! என் இரக்கத்திற்குரிய கொட்டைவால் அற்பனே! எனக்குத் திமிரில்லை, உனக்காய் வாய் விரித்தேன். பொறு, மன்னி, இல்லையென்றால் மீண்டும் வால்முறுக்கித் தோற்றுப்போ, திரும்பவும் கவிதையின் மலம் தருவேன். புசிக்க.
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|