|
||||||||
கால்மாட்டுச் சுழற்சிகள் |
||||||||
மயிலா நானொரு
இறகை உதிர்த்திவிட்டுப் போவதற்கு?
கண்ட இடத்திலும் நின்ற இடத்திலும்
சூடு சுணையின்றிப் பேட்டோடு புணர்கின்ற
பொிய கழிசறை
சேவற் கோழியா
சூத்தாம் புட்டியில் திறாவிவிட்டுத் திாிய?
என்னோடு எத்தனைபேர் மனக்குறுக்குத் தட்டினரோ?
இதயத்தை அடவுவைத்து
ஈக்கிற் சதையாட
வெந்து புழுங்கி காயத்தில் சுடுநீரை
ஊற்றிக் கொண்டு ஒப்பாாி வைப்பாரோ?
உலகெங்கும் மேல்மண்ணைக்
கீழ்மண்ணாய் மாற்றுகின்ற
அநியாயம்.
எழுகின்ற சூாியனைத்
துலாக்காலில் கட்டிவைத்து
ஈவு இரக்கமின்றி உாிக்கின்ற
அக்கிரமம்.
தாய்க்குப் பிள்ளையில்லை.
பிள்ளைக்குத் தாயில்லை.
வாங்கும் இருதயத்தைப் பொருத்துகின்ற நவயுகத்தில்
கொட்டைப் பாக்கும்
துள்ளித்தான் தெறிக்கிறது.
சகிக்க முடியுதில்லை
கண் மாணிக்கம் பார்க்குதில்லை.
பூசி மினுக்கி அலங்காரம் பண்ணுகின்ற
முகத்தில் ஒட்டறையைப் படியவிட்டு மானிடர்கள்
காலைத்தான் பேணுகின்றார்.
செருப்பணியும் அதற்குத்தான்.
சிங்காரம் பண்ணி மருளுவதை யோசித்தால்
ஒரு மல்லிப் பேயனைப்போல்
மூளை கூழாகிறது.
கூசாமல்
ஒரு சொட்டுக்
கவலையுமே இல்லாமல்
சொன்னாலும் சொன்னான் நாற்றவாய் விஞ்ஞானி
உலகம் உருண்டையென்று....
மயிலா நானொரு இறகை உதிர்த்திவிட்டுப் போவதற்கு? கண்ட இடத்திலும் நின்ற இடத்திலும் சூடு சுணையின்றிப் பேட்டோடு புணர்கின்ற பொிய கழிசறை சேவற் கோழியா சூத்தாம் புட்டியில் திறாவிவிட்டுத் திாிய?
என்னோடு எத்தனைபேர் மனக்குறுக்குத் தட்டினரோ? இதயத்தை அடவுவைத்து ஈக்கிற் சதையாட வெந்து புழுங்கி காயத்தில் சுடுநீரை ஊற்றிக் கொண்டு ஒப்பாாி வைப்பாரோ?
உலகெங்கும் மேல்மண்ணைக் கீழ்மண்ணாய் மாற்றுகின்ற அநியாயம். எழுகின்ற சூாியனைத் துலாக்காலில் கட்டிவைத்து ஈவு இரக்கமின்றி உாிக்கின்ற அக்கிரமம்.
தாய்க்குப் பிள்ளையில்லை. பிள்ளைக்குத் தாயில்லை. வாங்கும் இருதயத்தைப் பொருத்துகின்ற நவயுகத்தில் கொட்டைப் பாக்கும் துள்ளித்தான் தெறிக்கிறது.
சகிக்க முடியுதில்லை கண் மாணிக்கம் பார்க்குதில்லை. பூசி மினுக்கி அலங்காரம் பண்ணுகின்ற முகத்தில் ஒட்டறையைப் படியவிட்டு மானிடர்கள் காலைத்தான் பேணுகின்றார். செருப்பணியும் அதற்குத்தான். சிங்காரம் பண்ணி மருளுவதை யோசித்தால் ஒரு மல்லிப் பேயனைப்போல் மூளை கூழாகிறது.
கூசாமல் ஒரு சொட்டுக் கவலையுமே இல்லாமல் சொன்னாலும் சொன்னான் நாற்றவாய் விஞ்ஞானி உலகம் உருண்டையென்று....
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|