LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இன்ஸ்பிரேஷன் (Inspiration )

தொடர்:இன்ஸ்பிரேஷன்-3

தெரசா
   காலை நேரத்தில் அவசர அவசரமாக வேலைக்கு சென்று கொண்டிருக்கிறோம். அப்பொழுது ஒரு ஆசாமி குறுக்கே வந்து பிச்சை கேட்டால் நமக்கு சுருக்கென கோபம் வரும் காலங்காத்தால இம்சை செய்கிறானே என்று ஆத்திரம் வரும். வேலைக்கு செல்லும் போது ஒரு பிணம் எதிரில் வந்தால். நல்ல காரியத்துக்கு போகும் போது இப்படி அபசகுனமா இருக்கே என்று ஆத்திரம் வரும். பேருந்தில் ஏறி வேலைக்கு சென்று கொண்டிருக்கும்போது ஒரு தொழுநோயாளி நம் பக்கத்தில் அமர்ந்தால் சொல்லவே வேண்டாம் ஆத்திரத்தின் உச்சக் கட்டத்துக்கே நாம் சென்று விடுவோம். ஆனால், அன்னை தெரசாவுக்கு அதுதான் வாழ்க்கை.
இப்படித்தான் அன்னை தெரசா அவசர அவசரமாக தன் உறவினருடன் வெளியில் செல்லக் கிளம்பினார். அப்பொழுது அரசு காம்பெல் மருத்துவமனை எதிரில் ஒரு மரத்தடியில் நோயாளி ஒருவன் உயிருக்குப் போராடிய நிலையில் இருந்தான். அந்த நோயாளியின் நிலையைக் கண்டு மனம் துடிதுடித்துப்போனார் தெரசா. மருத்துவமனைக்குள் சென்றார்.

    ‘‘உங்கள் மருத்துவமனை எதிரில் ஒரு நோயாளி மரணப்படுக்கையில் துடிதுடித்து கொண்டிருக்கிகிறான். அவனுக்கு  நீங்கள் உதவக்கூடாதா ? ’’

     ‘‘ உயிர் பிழைக்கும் நிலையில் உள்ளவருக்குத்தான் எங்களால் உதவமுடியும். இன்னும் சிறிது நேரத்தில் உயிர் போகும் நிலையில் இருப்பவருக்கு எங்களால் உதவ முடியாது’’ என்றார் அந்த மருத்துமனை அதிகாரி.

  அந்த பதில் அன்னை தெரசாவின் மனதை உலுக்குப் போட்டது. ஒரு மனிதன் நல்லவனாக? கெட்டவனாக? ஏழை? பணக்காரனாக எப்படி வேண்டுமானாலும் வாழலாம். ஆனால் அவனது இறப்பு என்பது அமைதியாக நிகழவேண்டும். எந்த ஒரு மனிதனும் துடிதுடித்து அனாதையாக இறப்பதை விரும்பவில்லை. இறக்கும் தருவாயில் இறைவனை பிரார்த்தனை செய்தபடி அமைதியான மன நிலையில் தான் இறக்கவேண்டும் என்பது தெரசாவின் எண்ணமாக இருந்தது. இறக்கும் தருவாயில் இருந்த மனிதன் குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லாமல் எப்படி தவித்திருப்பான். துடித்திருப்பான். இறக்கும்போது என்னென்ன நினைத்தானோ. அதைவிடக் கொடுமையைசிக இறக்கும் தருவாயில் இருக்கும்போது கூட அவன் மீது அன்பு செலுத்த ஆள் இல்லையே என்று கலங்கினார். யாரோ ஒரு மனிதருக்காக வாய்விட்டுப் புலம்பினார். கண்ணீர் பெருக கதறி அழுதார். அதன் விளைவு?
      1952 ஆம் ஆண்டில் காளிகாட், காளிகோவில் பகுதியில் நிர்மல் ஹிர்தே என்ற பெயரில் ஒரு இறப்போர் இல்லம் தொடங்கினார். ஆரம்பத்தில் இறப்போர் இல்லத்துக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இறக்கும் நிலையில் உள்ள ஆதரவற்றவர்கள் ஐயோ எனக்கு இன்னும் சாவு வரமாட்டேன் கிறதே என்று மனம் கலங்காமல், மன அமைதியான சூழ்நிலையிலும் அன்பான சூழ்நிலையிலும் இறைவனுடைய பிரார்த்தனையிலுல் மரணத்தை தழுவுவார்கள். வாழ்வதற்குதான் அன்பும் அமைதியும் பிரார்த்தனையையும் தேடினோம். ஆனால் இறப்புக்கும் இது போன்ற சூழ்நிலை வேண்டும் என்று எடுத்துக் காட்டினார் தெரசா.

  நிர்மல் ஹிர்தே இல்லம் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் தொடங்கப்பட்டது. அதில் 85,000 பேர் அமைதியான முறையில் உயிர் நீத்துள்ளனர்.

    இதேபோல் ஒரு நாள் சாலை ஓரத்தில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் பச்சிளம் குழந்தை இருப்பதைப் பார்த்தார் அன்னை. அந்த குழந்தையை பேணிக் காப்பாற்றினார்.  பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு என்று 1953 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் நாள் ’ நிர்மல் சிசுபவன்’ தொடங்கப்பட்டது. பின்னர் அது நிர்மல் கென்னடி இல்லமாக வளர்ச்சியடைந்தது.

    1957 ஆம் ஆண்டு தொழு நோயாளிகளுக்காக ‘‘சாந்திநகர் தொழுநோயாளி இல்லம் தொடங்கப்பட்டது’’  தொழு நோயாளிகளைத் தொடும் போதெல்லாம் இறைவனைத் தொடும் உணர்வு தனக்கு ஏற்படுவதாக கூறினார்.  119 நிறுவனங்கள் மூலமாக 745 நாடுகளில் ஒரு நாளைக்கு 2 லட்சம் தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவந்தார் அன்னை தெரசா.  தொழுநோயாளிகள், உயிருக்குப் போராடுபவர்கள், இறக்கும் தருவாயில் உள்ளவர்களைப் பார்த்ததும் அன்னை தெரசாவுக்கு ஏற்பட்ட தூண்டுதல் காரணமாக அவர்களுக்காக ஒரு அமைப்பைத் தொடங்கினார். நோயாளிகள் மீது அன்பு செலுத்தினார்.

 

எர்னஸ்டோ சே குவேரா

     மாதா, பிதா, குரு தெய்வம் என்பார்கள். இங்கே ஒரு பிதா புரட்சி வீரனை உருவாக்கியிருக்கிறார். மருத்துவம் படித்த சே பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோதே அரசியல் மீது ஆர்வம் ஏற்பட்டது. வெளிநாடுகளைச் சுற்றிப்பார்த்தார். அர்ஜைன்டைன் கப்பலில் மாலுமியாகச் சேர்ந்து டிரினிடாட்டிலிருந்து பிரிட்டீஷ் கயானா வரை பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்தார். இரண்டாம்  உலகப் போர், மாணவன் சே குவேராவின் மனதில் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியது. சேவை ஒரு புதிய பாதைக்கு அழைத்துச் சென்றது. சே வின் தந்தை ரஷ்யாவின் ஆதரவாளராக இருந்தார். ’அச்சு’ நாடுகள் நிச்சயமாக தோற்கடிக்கப்படும் என்று நம்பினார். ஜெர்மன், நாஜிகளை தோல்வியடையச் செய்த ஸ்டாலின் கிராட் யுத்தம் அவர்களை கவர்ந்தது.

 அச்சு நாடுகளின் ஒற்றர்கள் அர்ஜெனிடைனா முழுவதும் இருந்தனர். அவர்கள் ரகசியமாக ஒரு வானொலி நடத்திவந்தனர். பெரரோன் அரசு நிர்வாகம் ஒற்றர்களின் செயல்பாடுகளை கண்டுகொள்ளவில்லை. சேவின் தந்தை அந்த ஒற்றர்களை கண்டறிவதில் உதவினார்கள். இதை நேரில் பார்த்த சே. அதில் தானும் ஈடுபட வேண்டும் என்று விரும்பினார். தன்னை உதவியாளனாக சேர்த்துக் கொள்ளும்படி தந்தையிடம் வற்புறுத்தினார். அதற்கு சேவின் தந்தை ஒத்துக்கொள்ளவில்லை.

    அர்ஜென்டைனாவில் பெரோன் ஆட்சிக் காலத்தில் ரகசியப் போராட்ட அமைப்புகள் அதிகமாக இருந்தன. கோர்டோபோபாவில் ஒரு அமைப்பில் சேவின் தந்தை அங்கத்தினராக செயல்பட்டார். ஒரு சில ரகசிய வேலைகளில் ஈடுபட்டிருந்தார். ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்போது போலீசாரை எதிர்க்கவும் தங்களை தற்காத்துக் கொள்ளும் பொருட்டும் சே வின் தந்தை குண்டுகள் தயாரித்தார். இந்த குண்டு தயாரிக்கும் பணி அவரது வீட்டிலேயே நடந்தது. இதை நேரடியாக பார்த்தார் சே.  

  தன்னை அந்தப் பணியில் சேர்த்துக்கொள்ளாத தந்தையைப் பார்த்து சே, ‘‘ பாபா! என்னை உங்களுக்கு உதவியாளனாக சேர்த்துக் கொள்ளப்போகிறீர்களா? அல்லது நான் வேறு ஒரு போராட்ட அமைப்பில் சேர்ந்துகொள்ளவா?’’ என்று கேட்டார்.

 தனது மகனின் அரசியல் பணி பற்றி தந்தை கூறுகையில்,
   டேட்டி (சே) அந்த நாட்களில் ஒரு ஜனநாயக வாதியாகவும் பாசிச எதிர்ப்பாளனாகவும் இருந்தான். அரசியல் போராட்டங்களில் தனக்கென ஒரு தனிப் பாதையை அமைத்துக் கொண்டான். எதிர் காலத்தில் மிகக் கடுமையான போராட்டங்களுக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டான். அரசியலில் தீவிரமாக சே பங்கேற்பதற்கு நான் உடனடியாக ஏற்றுக் கொள்ளாததற்கு அவனது ஆஸ்துமா நோய் தான் காரணம். அதே சமயத்தில் அவனது ஆர்வத்துக்கும் நடவடிக்கைக்கும் நான் எந்த தடையும் விதிக்கவில்லை. அவனது சொந்த விருப்பத்தின் படி சே செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். ’’


   சே வின் புரட்சிகர வாழ்க்கைக்கு தந்தை தூண்டுகோலாக அமைந்தார். பொதுவாக தந்தையை உதாரணமாக கொண்டு வாழ்க்கையை நடத்திச் சென்றவர்கள் மிகவும் குறைவு அவர்களில் ஒருவர் சே. பாரதியின் கண்களை திறந்த நிவேதிதா.


          நாம் எத்தனையோ மனிதர்களை சந்தித்திருக்கிறோம். அந்த சந்திப்பு நம்மை மேன்மை படுத்தியிருக்கிறதா? நாமும் நம்மைவிட உயர்ந்தவர்களை நாம் சந்தித்தால் அவர்களை வணங்கிவிட்டு அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது மட்டும் தான் நாம் செய்வது. அவர்களின் வார்த்தையை, வாக்கை நம்முடைய வாழ்க்கைக்கு எந்த வகையில் பயன்படுத்தியிருக்கிறோம் என்பது கேள்விக்குறியே.  சுப்பையாவுக்கு அதுமாதிரி ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. தன் வாழ்நாளில் ஒரு முறையாவது நிவேதிதாவை சந்தித்து விடவேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது. 1905 ஆம் ஆண்டு அரசியலில் பாரதி தீவிரமாக செயல்பட தொடங்கிய காலம் அது. கொல்கத்தாவில் நிவேதிதாவை சந்தித்தார்.

  நிவேதிதா பாரதியை பார்த்து ’’எங்கே உனது மனைவி?’’ என்று கேட்டார்.
  ‘எதற்கு எனது மனைவி, இது போன்ற மாநாட்டுக்கு எனது மனைவி என்ன செய்துவிடப்போகிறாள்?’ என்றார்.


  அதற்கு, ‘‘நீ ஆண் தானே! என்ன செய்து விட்டாய்?’’ என்று கேட்டார். அந்த கேள்வி பாரதியின் மனதை கிழித்தது. பாரதியின் மனதை புரட்டிப்போட்டது.
‘‘சுதந்திரத்துக்கு போராடும் நீங்கள் கண்களை விற்று சித்திரம் வாங்கி என்ன செய்யப்போகிறீர்கள் ?’’ என்று கேட்டார்.

 பெண்ணடிமைத்தனம் என்பது மிகப்பெரிய முட்டாள்தனமாக பாரதிக்கு பட்டது.
  ஒருவேளை பாரதி, நிவேதிதாவை சந்திக்காவிட்டால்


  
    ‘‘சின்னஞ் சிறு கிளியே& கண்னம்மா
      செல்வக் களஞ்சியமே!’’
    ‘‘ஓடி விளையாடு பாப்பா& நீ
      ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!’’


 என்ற வரிகளை மட்டும் பாடி  சாதாரண கவிஞனாக இருந்திருப்பார். நிவேதிதாவை சந்தித்தபின் அவருக்குள் உருவான மாற்றமும் தோன்றிய சிந்தனையும் அவரை புரட்சிக் கவிஞனாக மாற்றியது.


 
 அதற்கு பின்புதான் பாரதி
   ‘‘தையலை உயர்வு செய்!
  
‘‘பெண் விடுதலை வேண்டும்.....
 
 ‘‘மாதர்க் குண்டு சுதந்திரம்........
  
 ‘‘விடுத லைக்கு மகளிரெல் லோரும்......
  என்ற பாடல்களை எழுதி புரட்சிக் கவிஞரானார்.
 
 பின்னாளில் பாரதி நிவேதிதாவை பற்றி
 
  அவளுக்கு நிவேதனமாய், அன்பினுக்கோர்
    கோயிலாய், அடியேன், நெஞ்சில்
   இருளுக்கு ஞாயிறாய் எமதுயர்நா
      டாம் பயிர்க்கு மழையாய், இங்கு
  பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்
     பெரும் பொருளாய்ப் புன்மைய்த் தாதச்
  சுருளுக்கு நெருப்பாக்கி விளக்கிய தாய்
     நிவேதிதையைத் தொழுது நிற்பேன்.
   என்று பாடினார்.

_   சூர்யா சரவணன்   

-தொடரும் 

by Swathi   on 30 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சிலேடை-பகடி சிலேடை-பகடி
ஆராய்ச்சி ஆராய்ச்சி
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.