|
|||||
கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கும் கஷ்மோரா !! |
|||||
மெட்ராஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தி கொம்பன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். அது மட்டுமல்லாமல், இந்த படத்தில் முக்கிய வேடத்தில் ராஜ்கிரணும், கோவை சரளாவும் நடிக்கிறார்களாம். கொம்பன் படத்தை தொடர்ந்து, நடிகர் கார்த்தி, ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் கஷ்மோரா என்ற படத்தில் நடிக்க இருக்கிறாராம். படத்தின் தலைப்பு குறித்து இயக்குனரிடம் கேட்டால், அது படத்தில் வரக்கூடிய ஒருவரின் பெயர் . இந்த பெயரின் காரணம் படத்தில் தெரியவரும் என ரகசியம் காத்து வருகிறார் இயக்குநர். முற்றிலும் காமெடி கதை களத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளார். மேலும் கார்த்திக்கு இதில் இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். கஷ்மோரா படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த வருடத்தின் துவக்கத்தில் ஆரம்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
|||||
by Swathi on 25 Nov 2014 0 Comments | |||||
Tags: கார்த்தி கார்த்தி இரட்டை வேடம் கோகுல் நயன்தாரா Nayanthara Gokul Actor Karthi | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|