|
||||||||
கால்பந்து விளையாட்டு |
||||||||
காற்று நிறைந்த பந்து,கட்டம் போட்ட பந்து அங்கும் இங்கும் உருளுது பார்,
கால்கள் நடுவே நகருது பார்,
பல பல உதைகள் படுகுது பார்,
மனிதனுக்கு இணையாய் ஓடுது பார்,
வலையை நோக்கி ஓடுது பார்,
மக்கள் மனம் துடிக்குது பார்,
கோல் விழப்போகுமுன்னு நினைக்குது பார்,
அடடா கோலி தடுத்துவிட்டார் !
மீண்டும் அதனை உதைத்து விட்டார்
எதிர்பக்க வலையை நோக்கி ஓடுது பார்
இங்கும் மக்கள் பதட்டம் பார்,
கோல் விழபோகுமுன்னு நினைக்குது பார்,
இங்கும் கோலி தடுத்து விட்டார்.
உலகம் இதனை விரும்புது பார்,
உற்சாகம் கொள்ளுது பார்,
எதிரெதிர் அணியாய் இருந்தாலும்,
முடிவில் அனைவரும் நண்பர்கள்தான்.. |
||||||||
Football | ||||||||
by Dhamotharan.S on 16 May 2017 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|