எதிர்நீச்சல் படத்தை அடுத்து இயக்குனர் துரை செந்தில்குமார் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் மீண்டும் இணைந்திருக்கும் படம் காக்கிசட்டை.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். இப்படத்தை தனுஷே தயாரிக்கிறார்.
இறுதி கட்ட படபிடிப்பில் இருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், க்ரைம் பிராஞ்ச் போலீஸ் ஆபிஸராக நடித்து வருகிறார்.
காக்கிச்சட்டை படத்தின் பாடல்களை வரும் டிசம்பர் 14 ஆம் தேதி அன்று வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம் படக்குழுவினர். இந்த விழாவில் பழைய காக்கிச்சட்டை படத்தின் கதாநாயகனான கமல் கலந்து கொண்டு புதிய காக்கிச்சட்டை படத்தின் இசையை வெளியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அனேகமாக காக்கிச்சட்டை படம் வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை ஒட்டி வெளியாகும் என படக்குழு வட்டாரங்கள் தெரிவிகின்றன.
|