|
||||||||
சல்லிக்கட்டு |
||||||||
சல்லிக்கட்டு ஒரு புள்ளிக்கட்டில் துவங்கி
அள்ளிக்கட்டாய் ஆக்கப்பட்ட ஒரு கில்லிகட்டு.
தலைவர் பல கண்டினும் இலக்கு ஒன்றென
அலையார்ப்பரித்த வங்கக்கடல் மாணாக்கர்,
இளைஞர் பேராழியால் சுருங்கிப்போனதே!
அரசியல்வாந்திகள் அச்சத்தால் ஒடுங்கின.
அரசுஇயந்திரமும் அச்சுமுறிந்து முடங்கின.
திரை அரங்கிலும், பெருங்கடையிலும்,
அறை கணினியிலும், சிறை கைபேசியுமே
கதியென கிடந்தவர்; நிறை தலைமையுடன்
மதியொத்து மனமொத்து உணர்வுரைத்தனரே!.
முள்ளிவாய்க்காலெனும் புள்ளியில் துவங்கி,
முல்லை பெரியார், மீத்தேன், கெயில் என
காவிரியாய் விரிந்துததுவே - நாதியற்ற
பாவியாய், வக்கற்ற சாதியாய் பூமகளின் தலைமகன்.
எதற்கும் முன்னோடி எம்மக்கள் மிகையன்றே,
இதற்கும் வழிகாட்டி என்றால் குறையன்றோ?
அதற்கும் எட்டப்பன் இங்குண்டு என்றொருவன்,
அரசியல்விஷஞானம் புகுத்திட்டான் மறைந்திட்டே.
வெற்றி உரைக்க ஏற்பில்லா சிறுகூட்டம்
பற்றி வைக்கவே பதராய் முளைத்ததுவும்,
மொழியின் கோபமாய், இனத்தின் சாபமாய்,
வழியில் தடை இதையும் தாண்டி செல்வோம்!
உயிரில் பலவாயினும் உணர்வில் ஒன்றாகி
உலகிற்கே உரைத்திட்டார் தமிழர் பெருமை மீட்டிட்டார்
வீரம் மங்கவில்லை. புறநானுறும் மறக்கவில்லை.
திறம் பொங்கும் வெற்றி எம்தமிழர்க்கே உரித்தாகும்.
வாழ்க தாய் தமிழ் வாழிய எம்மக்கள். |
||||||||
JALLIKATTU | ||||||||
by D.Krishnamurthy on 26 Jan 2017 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|