நடிகர் சந்தானம், தயாரிப்பாளர்கள் ஞானவேல் ராஜா, ஏ.எம்.ரத்னம், ஆர்.பி.செளத்ரி ஆகியோரது வீடு மற்றும் அலுவலங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதலே அதிரடி ரெய்டில் ஈடுபட்டுள்ளனர்.
அஜீத் நடிப்பில் உருவாகியுள்ள ஆரம்பம் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் அந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்தின் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. இதே போன்று ஜில்லா பட தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி, ஆல் இன் ஆல் அழகுராஜா பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மற்றும் நடிகர் சந்தானம் ஆகியோரின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்களாம். இவர்கள் அனைவரும் முறையாக வருமான வரி செலுத்தாததால் இந்த அதிரடி ரெய்டு நடந்து வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் தெரிவித்துள்ளனர்.
|