LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

ரஷ்யாவில் உயர்கல்வி படிப்பதற்கு இந்திய மாணவர்களுக்கு அழைப்பு

சென்னையில் உள்ள ரஷ்ய அலுவலகம், இந்திய உயர்கல்வி மாணவர்கள் ரஷ்யாவில் படிப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளது.

ரஷ்யாவில் உயர்கல்வி படிக்க ஆர்வமுள்ள இந்திய மாணவர்கள், பல்வேறு பல்கலைக்கழகங்கள் வழங்கும் முழு நிதியுதவியுடன் கூடிய படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று சென்னையில் உள்ள ரஷ்ய அலுவலகம் தெரிவித்துள்ளது.

இணையதளம் வாயிலாக

நிதியுதவியை பொருத்தளவில், 89 இடங்களில் உள்ள 766 ரஷ்ய பல்கலைக்கழகங்களில் பொது மருத்துவம், இயற்பியல், அணுசக்தி மற்றும் ஏரோநாட்டிக்கல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு துறையில் சேரும் மாணவர்கள் பல்வேறு வகையிலான உதவிகளைப் பெற முடியும் என்று கூறியுள்ளது.

சென்னையில் உள்ள ரஷ்ய அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ரஷ்யாவில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் www.education-in-russia என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.

உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை

உதவித்தொகையுடன் ரஷ்யாவின் பல்கலைக்கழகங்களில் படிக்க ஆர்வமுள்ள இந்திய மாணவர்களுக்கு தேவையான தகவல்களை சென்னையில் உள்ள ரஷ்ய அலுவலகத்தில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24- ஆம் தேதி முதல் ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடங்கியதையடுத்து அந்த நாடுகளில் படித்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அவர்களின் சொந்த நாடுகளுக்கு திரும்பிச் சென்றனர். அதைத் தொடர்ந்து இந்த நாடுகளில் உயர்கல்வி படிக்கச் செல்வோரின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

by Kumar   on 25 Nov 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி. இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி.
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.