|
|||||
இனிப்பு சோமாஸ் |
|||||
தேவையானவை : மைதா - அரை கிலோ ரவை - அரை கிலோ நிலக்கடலை - 100 கிராம் எண்ணெய் - அரை லிட்டர் பொட்டுக்கடலை - 100 கிராம் வெல்லம் - கால் கிலோ ஏலக்காய் - 5 (பொடி செய்தது) செய்முறை : 1.பொட்டுக்கடலையை தனியே மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். 2.வறுத்த நிலக்கடலையை தோல் நீக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். 3.ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு நன்கு பொடித்து அதனுடன் ஏற்கனவே பொடித்து வைத்துள்ள நிலக்கடலை, பொட்டுக்கடலை, ஏலக்காய் போன்றவற்றைச் சேர்த்து நன்கு கிளறவும். இப்போது பூரணம் தயார். 4.அடுப்பில் வாணலியை வைத்து ரவையை கொட்டி லேசாக வறுத்து, மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். 5.ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பொடித்து வைத்துள்ள ரவை, ஒரு சிட்டிகை உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும் 6.சிறிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து தேய்த்து நடுவில் 1 - 2 தேக்கரண்டி கலந்து வைத்துள்ள பூரணம் வைத்து இரண்டாக மடித்து ஓரங்களை நன்கு அழுத்தி ஒட்டவும். 7.சோமாஸ் செய்வதற்கான அச்சை பயன்படுத்தி ஓரங்களை அழகு பட வெட்டவும். 8.அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி மிதமாகக் காய்ந்ததும் வெட்டி வைத்துள சோமாஸ்களை எண்ணையில் போட்டு பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும். வடிதட்டில் போட்டு எண்ணெய் வடிந்ததும் காற்று புகாத பாத்திரத்தில் பத்திரப்படுத்தி வைத்து சுவைத்து மகிழவும். |
|||||
by Arul Jothi on 18 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|