|
|||||
இனிப்பு ஆப்பம் |
|||||
தேவையானவை : பச்சரிசி - 1/2 டம்ளர்
புழுங்கல் அரிசி - 1 டம்ளர்
உளுத்தம் பருப்பு - 1 கைப்பிடி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
ஆப்ப சோடா - 1/2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 1/2 டம்ளர்
வெல்லம் - 1/4 கிலோ
சின்ன ஜவ்வரிசி - 1 தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1.ஒரு பத்திரத்தில் பச்சரிசி,புழுங்கல் அரிசி, உளுத்தம் பருப்பு, சின்ன ஜவ்வரிசி, வெந்தயம் அனைத்தையும் ஒன்றாக இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
2.பிறகு கிரைண்டரில் போட்டு, தேங்காய் துருவலையும் சேர்த்து நைசாக அரைக்க வேண்டும். மாவை எடுக்கு முன் வெல்லம் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும்.
3.மாவுடன் உப்பு சேர்த்து கரைத்து 8 மணி நேரம் புளிக்க விட வேண்டும்.
4.பிறகு ஆப்ப சோடா சேர்த்து கரைத்து வைக்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து, ஆப்ப சட்டியில் மாவை ஊற்றி, சட்டியை சுழற்றி, மாவை பரப்பி, மூடி வேக விட்டு எடுக்க வேண்டும்.சுவையான இனிப்பு ஆப்பம் ரெடி
|
|||||
by Arul Jothi on 18 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|