LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

யாசகர்கள் இல்லாத இந்தியா., மதுரை, அயோத்தி உட்பட 30 நகரங்களில் SMILE யோஜனா திட்டம் அமுல்.

இந்தியாவில் யாசகம் எடுப்பதை முற்றிலும் ஒழிக்கப் புதிய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது.

 

இந்தியாவை யாசகர்கள் இல்லாத நாடாக மாற்றும் நோக்கத்தில், யாசகம் கேட்கும் பெரியவர்கள், குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளை இலக்காகக் கொண்டு விரிவான கணக்கெடுப்பு மற்றும் மறுவாழ்வு முயற்சிக்காக நாடு முழுவதும் 30 நகரங்களை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது.

 

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் தலைமையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

 

2026க்குள் இந்த நகரங்களில் யாசகம் எடுக்கும் Hotspotகளை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதில் இது மாவட்ட மற்றும் நகராட்சி அதிகாரிகளை ஆதரிக்கும்.

 

 

அமைச்சகத்தின் இந்தக் கூட்டுத் திட்டமானது 'வாழ்வாதாரம் மற்றும் தொழில்களுக்கான விளிம்புநிலை தனிநபர்களுக்கான ஆதரவு' (SMILE) என்று பெயரிடப்பட்டுள்ளது. வடக்கே அயோத்தியிலிருந்து கிழக்கில் கவுகாத்தி வரையிலும், மேற்கில் திரிம்பகேஷ்வர் முதல் தெற்கே திருவனந்தபுரம் வரையிலும், இந்த நகரங்கள் அவற்றின் மத, வரலாற்று அல்லது சுற்றுலா முக்கியத்துவத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

 

இந்தத் திட்டத்தைத் திறம்படச் செயல்படுத்தவும், ஒவ்வொரு கட்டத்திலும் கண்காணிக்கவும், மத்திய அரசு பிப்ரவரி நடுப்பகுதியில் national portal மற்றும் mobile appயும் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

இந்த App யாசகம் கேட்கும் நபர்களின் நிகழ்நேர தரவு புதுப்பிப்புகளை வழங்க உதவும். அதனுடன், யாசகம் எடுக்கும் தொழிலில் ஈடுபடும் நபர்களின் தகவல்களை ஒருங்கிணைக்க உதவும்.

 

ஏற்கனவே கணக்கெடுப்பு முடிந்துவிட்டது.

 

25 நகரங்களிலிருந்து செயல் திட்டங்கள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன. காங்க்ரா, கட்டாக், உதய்பூர் மற்றும் குஷிநகரிலிருந்து ஒப்புதல் நிலுவையில் உள்ளது.

 

குறிப்பாக Sanchi நகர அதிகாரிகள் தங்கள் பகுதியில் யாசகம் எடுக்கும் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இதனால் சாஞ்சிக்கு பதிலாக வேறு நகரம் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

 

மறுபுறம் கோழிக்கோடு, விஜயவாடா, மதுரை மற்றும் மைசூர் நகரங்களில் ஏற்கனவே கணக்கெடுப்பு முடிந்துவிட்டது. இத்திட்டத்தின் செயலாக்க விவரங்கள் பல்வேறு நிலைகளில் உள்ளன. முதற்கட்டமாக ஒரு கணக்கெடுப்பும், அதைத் தொடர்ந்து அடையாளம் கண்டு யாசகர்கள் மீட்பு மற்றும் மறுவாழ்வு அளிக்கப்படும். மறுவாழ்வின் போது அவர்களுக்குக் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் முக்கிய சமூகத்தில் ஒருங்கிணைக்க வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

 

சமர்ப்பிக்கப்பட்ட செயல் திட்டங்களின் அடிப்படையில் செயல்படுத்தும் மாவட்ட மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு நிதி விடுவிக்கப்படுகிறது, இந்த முயற்சியை வெற்றிகரமாகச் செயல்படுத்தப் போதுமான ஆதாரங்கள் ஏற்கனவே திரட்டப்பட்டுள்ளன.

by Kumar   on 31 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம். ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம்.
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.