LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

உலகளவில் தங்கம் அதிகம் வைத்திருக்கும் நாடுகளில் 800 டன் இருப்புடன் 9-வது இடத்தில் இந்தியா

உலகளவில் அதிகம் தங்கம் வைத்திருக்கும் முதல் 10 நாடுகளில் 9ம் இடத்தில் இருக்கும் இந்தியாவிடம் 800 டன் தங்கம் இருப்பு உள்ளது. அமெரிக்கா முதலிடத்திலும், சீனா ஆறாவது இடத்திலும் உள்ளது. ஒவ்வொரு நாட்டின் கடன் தகுதி மற்றும் ஒட்டுமொத்தப் பொருளாதார நிலையை நிர்ணயிப்பதில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. தங்கத்தின் இருப்பை அடிப்படையாகக் கொண்டே அந்த நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிர்ணயம் செய்ய முடியும். 

 

நெருக்கடியான காலங்களில் தங்கம் இருப்பு பொருளாதார நிலையைச் சீரமைக்க உதவுகிறது. அதனால் தான் உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஏற்பட்டாலும் கூட, தங்கத்தின் விலை அடிக்கடி உயர்ந்து கொண்டே செல்கிறது. வளர்ந்து வரும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாகத் தற்போது பல நாடுகள் தங்க இருப்பை அதிகரித்து வருகின்றன.

 

அந்த நாடுகளின் தலைமை மற்றும் ரிசர்வ் வங்கிகள், தங்கத்தின் இருப்பை பாதுகாப்பான சொத்தாகக் கருதுகின்றன. மேற்கண்ட காரணங்கள் மட்டுமின்றி ஒவ்வொருவரின் நிலையான மற்றும் நம்பகமான சொத்தாகத் தங்கம் மதிப்பிடப்படுகிறது. வரலாற்று ரீதியாக ஒவ்வொரு நாட்டின் நாணயத்தின் மதிப்பை அதிகரிப்பதில் தங்கத்திற்கு முக்கிய பங்குள்ளது.

 

 

அமெரிக்க டாலரும் - தங்கமும்

 

அமெரிக்க டாலரின் விலை குறையும் போது, தங்கத்தின் விலை அதிகரிக்கிறது. தங்கத்தின் இருப்புக்கள் சர்வதேச வர்த்தகம் மற்றும் நிதியில் முக்கிய பங்கை வகிக்கின்றன. சில நாடுகள் வர்த்தக ஏற்றத்தாழ்வுகளைச் சமாளிக்க அல்லது கடன்களுக்கான பிணையமாகத் தங்கத்தைப் பயன்படுத்துகின்றன. தங்க இருப்பை அடிப்படையாகக் கொண்டே உலகளாவிய நிதி அமைப்பும் செயல்பட்டு வருகிறது.

 

 இந்நிலையில் அதிகளவில் தங்கம் இருப்பு வைத்திருக்கும் 10 நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. ‘ஃபோர்ப்ஸ்’ நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, உலகிலேயே அதிகத் தங்க இருப்புக்களைக் கொண்ட நாடாக அமெரிக்கா விளங்குகிறது.அதாவது 8,1336.46 டன் தங்கம் அமெரிக்காவிடம் உள்ளது. ஜெர்மனி 3,352.65 டன் தங்க இருப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இத்தாலி 2,451.84 டன் தங்க இருப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. நான்காவது இடத்தில் உள்ள பிரான்ஸ் 2,436.88 டன் தங்க இருப்பைக் கொண்டுள்ளது. ரஷ்யா 2,332.74 டன் தங்க இருப்புடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. அதிக நடுத்தர வருவாய் கொண்ட நாடான சீனாவிடம் 2,191.53 டன் தங்கம் இருப்பு உள்ளது. ஆறாவது இடத்தில் சீனா உள்ள நிலையில், ஏழாவது இடத்தில் இருக்கும் சுவிட்சர்லாந்திடம் 1,040.00 டன் தங்க இருப்பு உள்ளது. எட்டாவது இடத்தில் உள்ள ஜப்பானிடம் 845.97 டன் தங்க இருப்பு உள்ளது. 800.78 டன் இருப்பு தங்கத்துடன் இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ளது. 10வது இடத்தில் உள்ள நெதர்லாந்து 612.45 டன் தங்க இருப்பை கொண்டுள்ளது.

by Kumar   on 25 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம். ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம்.
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.