LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

கடந்த ஆண்டு 300 காப்புரிமைகளைப் பெற்று சென்னை ஐஐடி இரட்டிப்பு சாதனை.

iit-chகடந்த 2023ம் ஆண்டு 300 காப்புரிமைகளைப் பெற்று சென்னை ஐஐடி இரட்டிப்பு சாதனை படைத்துள்ளது. கடந்த 2022-ல் 156 காப்புரிமைகள் பெறப்பட்ட நிலையில், 2023-ல் அது 300 என்ற அளவுக்குக் கணிசமாக அதிகரித்துள்ளது.

 

இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டபின் 1975-ல் முதன்முறையாகக் காப்புரிமைக்கு விண்ணப்பிக்கப்பட்டது. தற்போதுவரை இந்தியாவிலும் (1,800), வெளிநாடுகளிலும் (750) மொத்தம் 2,550 அறிவுசார் சொத்து (காப்புரிமை உள்பட) விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சுமார் 1,100 விண்ணப்பங்கள் ஐபி-க்கள்/ அனுமதிக்கப்பட்ட காப்புரிமைகள் எனப் பதிவு செய்யப்பட்டவையாகும் (சுமார் 900 இந்தியாவையும், & 200 சர்வதேச நாடுகளையும் சேர்ந்தவை).

 

மாணவர்களுக்குப் பாராட்டுகள்

 

சென்னை ஐஐடி 1975-ம் ஆண்டு ஜனவரியில் காப்புரிமை விண்ணப்பங்களைத் தாக்கல் செய்யத் தொடங்கியது பெருமைக்குரிய விஷயமாகும். மொத்த ஐபி விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2016-ல் 1,000-ஐயும், 2022-ல் 2,000-ஐயும், 2023-ல் 2,500-ஐயும் கடந்துள்ளது. ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்களின் முன்னோடியான, விளைவை ஏற்படுத்தும் ஆராய்ச்சியைப் பாராட்டிய சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “நாம் சுதந்திரத்தின் 100-வது ஆண்டை நோக்கிப் பயணிக்கும்போது இந்தியா வல்லரசு நாடாக உருவெடுக்க நமது கருத்துக்களைப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது. அதிக எண்ணிக்கையிலான காப்புரிமைகளைத் தாக்கல் செய்து சாதனை படைக்கும் வகையில் விரிவான திட்டத்தைத் தொகுத்தளித்த தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி அலுவலகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு என்னுடைய பாராட்டுகள்” எனக் குறிப்பிட்டார்.

 

வயர்லெஸ் நெட்வொர்க்குகள், நவீனப் பொருட்கள், ரோபாட்டிக்ஸ், சேர்க்கை உற்பத்தி தொழில்நுட்பம், இயந்திர முன்னேற்றங்கள், உதவி சாதனங்கள், மேம்பட்ட சென்சார் பயன்பாடுகள், தூய்மையான எரிசக்தி, விண்வெளிப் பயன்பாடுகள், பாலிமர் பொருட்கள் மற்றும் மென்படலம், வினையூக்கிகள், உயிரியல் மருத்துவப் பயன்பாடுகள் போன்ற களங்களிலும், வளர்ந்துவரும் பல்வேறு தொழில்நுட்பங்களிலும் சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே அறிவுசார் சொத்துகளை (IP) உருவாக்கியுள்ளனர்.

 

அறிவுசார் சொத்து மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் தொடர்பான பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைக்கும் பணியை சென்னை ஐஐடி-ல் உள்ள தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி (Industrial Consutancy and Sponsored Research- ICSR) அலுவலகம் மேற்கொண்டு வருகிறது.

by Kumar   on 05 Mar 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.