|
|||||
ஐ எதைப்பற்றிய படம் : சொல்கிறார் விக்ரம் !! |
|||||
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சியான விக்ரம் நடித்து, தீபாவளியை ஒட்டி வெளியாக இருக்கும் படம் ஐ. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஏமி ஜாக்சன் நடித்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில், ஹாலிவுட் நடிகர் அர்னால்ட், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டு ஐ படத்தின் பாடல்களை வெளியிட இருக்கிறார்கள். இப்படம் குறித்து ஷங்கர் பல்வேறு பேட்டிகள் அளித்திருந்தாலும், நடிகர் விக்ரம் இப்படம் குறித்து எதுவுமே பேசாமல் இருந்தார். முதன் முறையாக தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், "'ஐ' என்றால் அழகு என்று அர்த்தம். விளம்பரம் மற்றும் மாடலிங் உலகம் குறித்து இப்படம் பேசும். ஒரு மாடல் உடைய கடுமையான உழைப்பும், வேதனையும் தான் படம். பிறக்கும் போதே மாடலாக வேண்டும் என்று இல்லாமல், நாயகன் எதிர்பாராத விதமாக எப்படி மாடலாகிறான், அதற்குப் பிறகு என்னவாகிறது என்பது தான் 'ஐ'. இந்த படம் முழுமுழுக்க ஷங்கரின் பாணியில் உருவாக்கப்பட்ட ஒரு த்ரில்லர் படம். இந்த படத்திற்காக மூன்று முறை எனது உடலமைப்பை மாற்றினேன். கதை மிகவும் பலமாக இருந்ததால், என்னுடைய கடுமையான உழைப்பைக் கொட்டியிருக்கிறேன். நான் இந்தப் படத்தை ரொம்ப ஆவலாக எதிர்நோக்கி இருக்கிறேன். என விக்ரம் கூறியுள்ளார். |
|||||
by Swathi on 15 Sep 2014 0 Comments | |||||
Tags: I Movie Vikram I Movie I Movie Story ஐ விக்ரம் ஐ ஐ கதை | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|