|
||||||||
சேப்பங்கிழங்கு ட்ரை ரோஸ்ட் (seppankilangu dry roast) |
||||||||
தேவையானவை : சேப்பங்கிழங்கு -6 சாம்பார் பொடி - 1 டீஸ்பூன் மஞ்சள்த்தூள் - 1/2 டீஸ்பூன் கடலைமாவு - 2 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் சீரகம் - 3/4 டீஸ்பூன் பெருஞ்சீரகம் (சோம்பு) - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது பெருங்காயம் - 1 சிட்டிகை உப்பு - சுவைக்கேற்ப எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: 1.முதலில் சேப்பங்கிழங்கை தண்ணீரில் போட்டு, உப்பு சேர்த்து வேகவிடவும். 2.பிறகு ஆறியதும் தோலுரித்து, துண்டுகளாக நறுக்கி வைக்கவும். 3.இதனுடன் சாம்பார் பொடி, மஞ்சள்த்தூள், கடலைமாவு எல்லாமுமாக சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து வைக்கவும். 4.கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும், கடுகு போட்டு பொரிந்ததும், பெருங்காயம், சீரகம், பெருஞ்சீரகம், கறிவேப்பிலை போட்டு லேசாக வதக்கவும். 5.பின்பு தயார் செய்து வைத்திருக்கும் சேப்பங்கிழங்கைப்போட்டு, சாம்பார்ப்பொடி வாசனைபோய் முறுகலாகும் வரை வதக்கவும். |
||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|