|
||||||||
ஒலன் (oolan) |
||||||||
தேவையானவை: பூசணிக்காய் - 150 கிராம், பரங்கிக்காய் - கால் கிலோ, கேரட் - 100 கிராம், சோம்பு - சிறிய பீஸ், நீள கத்தரிக்காய் - 100 கிராம், தட்டாம்பயிறு - 100 கிராம், பச்சை மிளகாய் - 4, தேங்காய் - 1, தேங்காய் எண்ணெய் -தே.அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, மஞ்சள் பொடி -1 சிட்டிகை. செய்முறை: 1.முதலில் பூசணிக்காய், கேரட், சேம்பு, கத்தரிக்காய், பரங்கிக்காய் ஆகியவற்றை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.ங்கள். தேங்காயைத் துருவி இரண்டு தரத்தில் பால்எடுங்கள். 2.பிறகு தட்டாம்பயிறை காய்கறிகளோடு கலந்து இரண்டாம் பாலை ஊற்றி வேக வையுங்கள். 3.பின்பு கொதித்து வரும்போது மிளகாயை நீளவாக்கில் கீறிப்போட்டு, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து, முதல் பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை போட்டு இறக்கவும். |
||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|