|
||||||||
சில்லி ஃப்ரைட் பொட்டெட்டோ (chilly bright potato) |
||||||||
தேவையானவை: உருளைக்கிழங்கு - 2 மைதா - 1 ஸ்பூன் கார்ன்ப்ளார் - 1 ஸ்பூன் முட்டை - 1 உப்பு-சிறிது தண்ணீர்-சிறிது எண்ணெய்-தேவையானளவு பூண்டு - 1 ஸ்பூன் பச்சை மிளகாய் - 4 இஞ்சி - 1 ஸ்பூன் பெரிய வெங்காயம் - 1 குடைமிளகாய் - 1 வெள்ளை மிளகு - 1 ஸ்பூன் ரெட் சில்லி பேஸ்ட் - 1 ஸ்பூன் சோயா சாஸ்- 1 ஸ்பூன் ஸ்ப்ரிங் ஆனியன் - சிறிதளவு செய்முறை: 1.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். 2.வெங்காயம் பாதி வெந்ததும், குடைமிளகாய், வெள்ளை மிளகு, உப்பு, ரெட் சில்லி பேஸ்ட், சோயா சாஸ், 2 ஸ்பூன் தண்ணீர் ஊற்றி கிளறவும். 3.உருளைக்கிழங்கை ஸ்லைஸ்களாக அரிந்துகொள்ளவும். அதனுடன் மைதா,கார்ன்ப்ளார் மாவு, உப்பு, முட்டை சேர்த்து பிசறி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். 4.மசாலா வெந்ததும் பொரித்த உருளைக்கிழங்கு, ஸ்ப்ரிங் ஆனியன் சேர்த்து கிளறி பரிமாறவும். |
||||||||
by akashaya on 05 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|