LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

நாடு முழுவதும் ஒரே மாதிரி டிரைவிங் லைசென்ஸ்!

நாடு முழுவதும் ஒரே மாதிரியான டிரைவிங் லைசென்ஸ் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தற்போது இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமான லைசென்ஸ்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான டிரைவிங் லைசென்ஸ் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய போக்குவரத்து துறை தெரிவித்து இருக்கிறது. 

அதன்படி வேறுவேறுவிதமான லைசன்ஸுகளுக்கு பதிலாக ஒரே மாதிரியான லைசன்ஸ் கொடுக்கப்படும்.  இதை வழங்க நாடு முழுவதும் ஒரே மாதிரியான நடைமுறையும் கடைபிடிக்கப்படும். 

இது குறித்து அதிகாரிகள் கூறி இருப்பதாவது: 

நாடுமுழுவதும் நாள் ஒன்றுக்கு 32 ஆயிரம் டிரைவிங் லைசென்ஸ் வழங்கவும், புதுப்பிக்கவும் செய்யப்படுகி்ன்றது. அதே போல் நாள் ஒன்றுக்கு 43 ஆயிரம் வாகனங்கள் பதிவு செய்யவும், மீண்டும் புதுப்பிக்கவும் செய்யப்படுகின்றது. 

இந்த நடைமுறைகளை ஒருமுகப்படுத்தும் விதமாக வரும் 2019ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான லைசென்ஸ் வழங்கும் முறை அமல்படுத்தப்பட உள்ளது. இந்த லைசென்ஸ் ஏடிஎம் கார்டைப் போன்று வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

இதில் பொருத்தப்பட்டு இருக்கும் சிப்பில் க்யூ.ஆர். கோடு வழங்கப்படும். இதில் டிரைவிங் லைசென்ஸ் பெறுவோரின் அனைத்து விவரங்களும் பதியப்பட்டு இருக்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர். 

by Mani Bharathi   on 16 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி. இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி.
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.