LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

கஜா புயல் பாதிப்பு: தமிழகத்துக்கு கேரளா உதவியாக இருக்கும்- முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு!

கஜா புயல் பாதிப்பிற்கு தமிழகத்திற்கு கேரளா உதவியாக இருக்கும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்து உள்ளார்.

கேரள முதல்வர் பினராய் விஜயன் தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு கேரளா துணையாக இருக்கும். திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்ட மக்களுக்கு குடிநீர், தார்ப்பாய், மெழுகுவர்த்திகள், உலர் உணவு பொருட்கள், ஆடைகள் அனுப்பி வைக்கப்படும்.

கேரள மாநில இயற்கைப் பேரிடர் மீட்பு மையம் இந்தப் பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ளும். 

இவ்வாறு பினராய் விஜயன் கூறியுள்ளார். 

கேரளாவில் சமீபத்தில் கனமழை கொட்டித்தீர்த்து கடும் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது தமிழக மக்கள் அம்மாநில மக்களுக்கு உதவிக்கரம் நீட்டினர். ஏராளமானவர்கள், கேரள அரசின் முதல்வர் நிவாரண நிதிக்கு பெருமளவில் நிதி அளித்தனர். அதனை பெருந்தன்மையுடன் பத்திரிகைகளில் தெரிவித்த முதல்வர் பினராய் விஜயன், இப்போது பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

by Mani Bharathi   on 21 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி. இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி.
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.