LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

பாஜக மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது.

முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானிக்கு (96) பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. மறைந்த பிஹார் முன்னாள் முதல் வர் கர்ப்பூரி தாக்குருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது கடந்த மாதம் 23-ம் தேதி அறி விக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 50-வது நபராக முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. 

 

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை குடியரசுத் தலைவர் மாளிகை 03-02-2024 அன்று வெளியிட்டது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பதை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன். அவரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன். நமது காலத்தில் வாழும் மிகவும் மதிக்கப்படும் அரசியல் தலைவர்களில் அத்வானியும் ஒருவர்.

 

இந்தியாவின் வளர்ச்சிக்கான அவரது பங்களிப்பு மகத்தானது. அடிமட்டத் தொண்ட னில் தொடங்கி நாட்டின் துணை பிரதமராக உயர்ந்தவர். அவரது நாடாளுமன்ற விவாதங்கள் சிறப்பு வாய்ந்ததாகவும் ஆழ்ந்த அர்த்தம் கொண்டதாகவும் இருந்தன. அரசியல் நாகரிகத்துக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். தேச ஒற்றுமை, கலாச்சாரத்தைப் பாதுகாப்பதில் அளப்பரிய பணிகளைச் செய்துள்ளார்.

 

அவருக்குப் பாரத ரத்னா விருது அறி விக்கப்பட்டிருப்பது எனக்கு மிகவும் உணர்வுப்பூர்வமான தருணமாகும். அவரிடம் பழகுவதற்குக் கிடைத்த வாய்ப்புகள் எனக்குக் கிடைத்த பாக்கியம். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 

 தாழ்மையோடு ஏற்கிறேன் 

 

இதுகுறித்து எல்.கே. அத்வானி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எனக்குப் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்குக் கிடைத்த மரியாதை மட்டுமல்ல, எனது சிந்தனை, கொள்கைகள், வாழ்நாள் பணிக்காகக் கிடைத்த மரியாதையாக கருதுகிறேன். எளிமை, தாழ்மை, நன்றி பெருக்குடன் பாரத ரத்னா விருதை ஏற்றுக் கொள்கிறேன். இந்த வாழ்க்கை எனக்கானது கிடையாது, எனது நாட்டுக்கானது என்றகொள்கையுடன்வாழ்ந்து வருகிறேன்.

 

இந்த நேரத்தில் பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா, மறைந்த முன் னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோரை நினைவுகூர்ந்து அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். பாஜக தொண்டர்கள், ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் அனைவருக்கும் மன தார நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன். எனக்குப் பாரத ரத்னா விருதை அறிவித்த குடியரசுத் தலைவர் திரவு பதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியை உரித்தாக்குகிறேன்.

 

வாழ்நாள் முழுவதும் எனக்கு உறுதுணையாக இருந்த எனது குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக மறைந்த எனது மனைவி கமலாவுக்கு நான் மிகுந்த கடமைப்பட்டு உள்ளேன். நமது நாடு மேன்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும். புதிய உச்சங் களை தொட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

 

அத்வானியின் அரசியல் பயணம் 

 

1927 நவ.8-ம் தேதி பாகிஸ்தானின் கராச்சி நகரில் எல்.கே. அத்வானி பிறந்தார். 1942-ல் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்தார். 1944-ல் கராச்சியில் உள்ள மாடல் உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணியில் இணைந்தார். இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது 1947-ல் அத்வானியின் குடும்பம் டெல்லியில் குடியேறியது. 1947 முதல் 1951 வரை ஆர்எஸ்எஸ் தொண்டராகத் தீவிரமாகப் பணியாற்றினார்.

1958- 63-ம் ஆண்டுகளில் டெல்லி மாநில ஜன சங்கத்தின் செயலாளராகப் பதவி வகித்தார். 1960-67-ம் ஆண்டுகளில் ஜன சங்க அரசியல் இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். 1965-ல் கமலாவைத் திருமணம் செய்தார். அத்வானி-கமலா தம்பதிக்கு பிரதிபா என்ற மகளும், ஜெயந்த் என்ற மகனும் பிறந்தனர். 1970-ல் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1972-ல் பாரதிய ஜன சங்கத்தின் தலைவரானார். 1975-ம் ஆண்டு அவசரநிலை காலத்தில் பெங்களூருவில் அத்வானி கைது செய்யப்பட்டார். 1977 முதல் 1979 வரை மத்தியத் தகவல், தொழில்நுட்ப அமைச் சராக பதவி வகித்தார். 1980-86-ல் பாஜக பொதுச்செயலாளராகப் பதவி வகித்தார். 1986, 1988-ம் ஆண்டுகளில் பாஜக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1988-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். கடந்த 1990-ம் ஆண்டில் குஜராத்தின் சோம்நாத்திலிருந்து அயோத்திக்கு ரத யாத்திரை மேற்கொண்டார். 1999 முதல் 2004-ம் ஆண்டு வரை மத்திய உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார். 2002 முதல் 2004-ம் ஆண்டு வரை துணைப் பிரதமராகப் பதவி வகித்தார்.

by Kumar   on 07 Feb 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம். ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம்.
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.