LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

அப்துல் கலாம் - பெயர் சூட்டப்பட்ட கடல் உயிரினம்

ராமேசுவரம் அருகே மண்டபம் கடற்பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்ட புதிய கடல் வாழ் நுண்ணுயிருக்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
***************************
டார்டிகிரேட்ஸ் (Tardigrade)என்பது சின்னஞ்சிறிய நீர் வாழ் நுண்ணுயிர்கள் ஆகும். இதை வெறுங்கண்ணால் பார்க்க இயலாது நுண்நோக்கி உதவியுடன்தான் இதைப் பார்க்க முடியும். இவை அரை மில்லி மீட்டரிலிருந்து அதிகப்பட்சமாக ஒன்றரை மில்லி மீட்டர் வரை வளரக்கூடியது. இவற்றிற்கு 'நீர்க் கரடிகள்' என்ற பட்டப்பெயரும் உண்டு.
*****************************
கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கடல் உயிரியல், நுண்ணுயிரியல் மற்றும் உயிர் வேதியியல் துறை தலைவர் பேரா.எஸ்.பிஜோய் நந்தன் ஆராய்ச்சி மாணவர் கே.விஷ்ணுதத்தன் ஆகிய இருவரும் புதிய வகை கடல் வாழ் டார்டிகிரேட்ஸ் நுண்ணுயிரை ராமேசுவரம் அருகே மண்டபம் கடற்பகுதியில் அண்மையில் கண்டறிந்தனர். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவாக இந்த உயிரினத்திற்கு 'பாட்டிலிப்ஸ் கலாமி' என அவர்கள் பெயர் சூட்டி உள்ளனர்.
***************************
இது குறித்து பேராசிரியர் எஸ்.பிஜோய் நந்தன் கூறும்போது, ''இந்திய கடல் பகுதியில் கடல்வாழ் டார்டிகிரேட்ஸ் நுண்ணுயிரை 2021ம் ஆண்டு முதன்முறையாக கேரளாவிலுள்ள வடகராவில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இரண்டாவது முறையாக இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியான ராமேசுவரம் அருகே மண்டபம் கடற்பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. பாட்டிலிப்ஸ் கலாமி சராசரியாக 170 மைக்ரோமீட்டர்கள் (0.17 மிமீ) நீளமும், சுமார் 50 மைக்ரோமீட்டர்கள் (0.05 மிமீ) அகலமும் கொண்டது. இதன் தலை சரிவகம் போன்று உள்ளது. அதிலிருந்து நீட்டிக்கப்பட்ட கூர்மையான நுனி கொண்ட இழை போன்ற இணைப்புகள் உள்ளன. நான்கு ஜோடி கால்களும், வெவ்வேறு நீளம் கொண்ட உணர்ச்சி முதுகெலும்புகளும் இதற்கு உள்ளன. இதில் பெண் இனம் ஆண் இனத்தை விட சற்று பெரியதாக இருக்கும்.
**************************
சர்வதேச அறிவியல் ஆய்விதழில் வெளியீடு
*****************************
அப்துல் கலாமின் சொந்த ஊரான ராமேசுவரவரத்திற்கு அருகில் கண்டுப்பிடிக்கப்பட்டதால் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மீதான கலாமின் அர்ப்பணிப்புக்காக இந்த உயிரினத்திற்கு கலாமின் பெயரை சூட்டியுள்ளோம்'' என்றார். இந்த கண்டுபிடிப்பு சூடாக்சா எனும் விலங்கியலுக்கான சர்வதேச அறிவியல் ஆய்விதழில் தற்போது வெளியாகி உள்ளது.

ராமேசுவரம் அருகே மண்டபம் கடற்பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்ட புதிய கடல் வாழ் நுண்ணுயிருக்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

டார்டிகிரேட்ஸ் (Tardigrade)என்பது சின்னஞ்சிறிய நீர் வாழ் நுண்ணுயிர்கள் ஆகும். இதை வெறுங்கண்ணால் பார்க்க இயலாது நுண்நோக்கி உதவியுடன்தான் இதைப் பார்க்க முடியும். இவை அரை மில்லி மீட்டரிலிருந்து அதிகப்பட்சமாக ஒன்றரை மில்லி மீட்டர் வரை வளரக்கூடியது. இவற்றிற்கு 'நீர்க் கரடிகள்' என்ற பட்டப்பெயரும் உண்டு.

'பாட்டிலிப்ஸ் கலாமி'

கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கடல் உயிரியல், நுண்ணுயிரியல் மற்றும் உயிர் வேதியியல் துறை தலைவர் பேரா.எஸ்.பிஜோய் நந்தன் ஆராய்ச்சி மாணவர் கே.விஷ்ணுதத்தன் ஆகிய இருவரும் புதிய வகை கடல் வாழ் டார்டிகிரேட்ஸ் நுண்ணுயிரை ராமேசுவரம் அருகே மண்டபம் கடற்பகுதியில் அண்மையில் கண்டறிந்தனர். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவாக இந்த உயிரினத்திற்கு 'பாட்டிலிப்ஸ் கலாமி' என அவர்கள் பெயர் சூட்டி உள்ளனர்.

ராமேசுவரம் மண்டபம் கடற்பகுதியில் கண்டுபிடிப்பு

இது குறித்து பேராசிரியர் எஸ்.பிஜோய் நந்தன் கூறும்போது, ''இந்திய கடல் பகுதியில் கடல்வாழ் டார்டிகிரேட்ஸ் நுண்ணுயிரை 2021ம் ஆண்டு முதன்முறையாக கேரளாவிலுள்ள வடகராவில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இரண்டாவது முறையாக இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியான ராமேசுவரம் அருகே மண்டபம் கடற்பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. பாட்டிலிப்ஸ் கலாமி சராசரியாக 170 மைக்ரோமீட்டர்கள் (0.17 மிமீ) நீளமும், சுமார் 50 மைக்ரோமீட்டர்கள் (0.05 மிமீ) அகலமும் கொண்டது. இதன் தலை சரிவகம் போன்று உள்ளது. அதிலிருந்து நீட்டிக்கப்பட்ட கூர்மையான நுனி கொண்ட இழை போன்ற இணைப்புகள் உள்ளன. நான்கு ஜோடி கால்களும், வெவ்வேறு நீளம் கொண்ட உணர்ச்சி முதுகெலும்புகளும் இதற்கு உள்ளன. இதில் பெண் இனம் ஆண் இனத்தை விட சற்று பெரியதாக இருக்கும்.

சர்வதேச அறிவியல் ஆய்விதழில் வெளியீடு

அப்துல் கலாமின் சொந்த ஊரான ராமேசுவரவரத்திற்கு அருகில் கண்டுப்பிடிக்கப்பட்டதால் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மீதான கலாமின் அர்ப்பணிப்புக்காக இந்த உயிரினத்திற்கு கலாமின் பெயரை சூட்டியுள்ளோம்'' என்றார். இந்த கண்டுபிடிப்பு சூடாக்சா எனும் விலங்கியலுக்கான சர்வதேச அறிவியல் ஆய்விதழில் தற்போது வெளியாகி உள்ளது.

by Kumar   on 23 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி. இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி.
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.