நீதானே என் பொன்வசந்தம் என்ற படத்தின் மூலம் கதாபத்திர நடிகையாக அறிமுகமான வித்யூலேகா ராமன், அதனை தொடர்ந்து, தீயா வேல செய்யணும் குமார், ஜில்லா, வீரம், மாலினி 22 பாளையங்கோட்டை, காக்கி சட்டை ஆகிய படங்களில் பல முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்தார்.
அது மட்டுமல்லாமல், தற்போது மாஸ், புலி, வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க, மாப்பிள்ளை சிங்கம், டக்கர் ஆகிய படங்களில் நடித்தும் வருகிறார். சமீபத்தில் என்னை அறிந்தால் படத்துக்கு அஜித்துக்கு ஆல் த பெஸ்ட் என மெஸேஜ் அனுப்பியுள்ளார் வித்யூலேகா. அதற்கு அஜித் சமீபத்தில் பதில் அளித்தவர் மேலும் லேட்டானதற்கு மன்னிக்கவும் எனவும் கூறவே தனது ட்விட்டர் பக்கத்தில் அதை பகிர்ந்துள்ளார் வித்யூலேகா.
தல மேஸேஜுடன் எழுந்தேன். நான் ‘என்னை அறிந்தால்’ படத்திற்கு ஆல் த பெஸ்ட் என அனுப்பியதற்கு இப்போது பதிலுடன் கூடவே மன்னிக்கவும் எனவும் அனுப்பியுள்ளார். என்ன ஒரு ஸ்டார். வாவ் என ட்விட்டரில் மெய்சிலிர்த்துள்ளார் வித்யூலேகா.
|