LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

நெய்வேலியில் இருந்து விமான போக்குவரத்து

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டின்             பொருளாதாரத்தை சார்ந்தே இருக்கும். ஆனால், அந்த      பொருளாதாரம் அந்த நாட்டின் போக்குவரத்தை அடிப்படையாக கொண்டே அமைகிறது. அனைத்திலும் வளர்ச்சியடைந்தும்     போக்குவரத்து குறைபாடு உள்ளது என்றால் பொருளாதாரம் வளர்ச்சியடையாமல் வீழ்ச்சியை சந்திக்கும். அதுமட்டுமல்ல, மக்களின் அடிப்படை தேவைகளில் போக்குவரத்து மிகவும்    இன்றியமையாதது. அனைத்து வகை போக்குவரத்து வசதிகளும் உள்ள ஒரு நாடு மிக விரைவில் வளர்ச்சியடையும்.  
அதுமட்டுமின்றி எங்கோ கடைகோடியில் உள்ள கிராமங்களை கூட நகரத்தோடு இணைப்பதில் பெரும் பங்கு வகிப்பது     போக்குவரத்துதான் என்றால் அதில் மிகையில்லை.         பொருளாதாரம் சார்ந்த வாய்ப்புகளுக்காக மக்கள் பெருநகரங்களை தேடிச்செல்ல தொடங்கியுள்ளனர்.   அப்படி மக்கள் இடம்பெயர சென்றுவர பேருந்து, ரயில் உள்ளிட்ட சேவைகளை அதிகம்                         பயன்படுத்துகின்றனர். இதற்கு அடுத்தபடியாக மக்கள் அதிகம் பயன்டுத்துவது விமான போக்குவரத்தையே. 
என்றாவது ஒருநாள் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்கிற கனவு ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும். அப்படி நீண்டகால கனவுகளுடன் இருப்பவர்கள் தான் கடலூர் மாவட்ட மக்கள். கடலூர் மாவட்டத்தில் உள்ளது நெய்வேலி. இங்கு பழுப்பு நிலக்கரி சுரங்கம், அனல் மின் நிலையம் ஆகியவை செயல்படுகின்றன.. கடலூர் மாவட்டத்திலேயே மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நகரம் நெய்வேலி. மேலும் மாவட்டத்திலேயே முதல் விமான போக்குவரத்து நடந்ததும் இங்கு தான்.
கடந்த 1987&ம் ஆண்டு சென்னையில் இருந்து நெய்வேலிக்கு குட்டி ரக விமானங்களை ("வாயுதூத்") இயக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்தது. அதற்காக நெய்வேலி டவுன்ஷிப் அருகில் சுமார் 220 ஏக்கர் பரப்பளவில் இந்த விமான நிலையம் கட்டமைக்கப்பட்டது. இதையடுத்து சென்னைக்கும், நெய்வேலிக்கும் இடையே கடந்த 8.6.1987 அன்று முதன் முறையாக குட்டி விமான போக்குவரத்து தொடங்கியது. 
இதையடுத்து சென்னையில் இருந்து நெய்வேலிக்கு ஞாயிற்றுக்கிழமைகள் தவிர பிற எல்லா நாட்களிலும் குட்டி விமானம் இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து நெய்வேலிக்கு வெறும் 45 நிமிட பயணம் என்பதால், வசதி படைத்த பலர் குட்டி விமானத்தில் பயணம் மேற்கொள்ளவே அதிக ஆர்வம் காட்டினர். இது கார், பேருந்து உள்ளிட்டவற்றில் பயணிப்பதை விட குட்டி விமானத்தில் செல்வதால் சுமார் 4 மணி நேரம் மிச்சமானது.
ஆனால், அந்த விமானத்தில் ஒரே நேரத்தில் 19 பேர் மட்டுமே பயணம் செய்யலாம். இந்த விமான சேவை  ஆரம்பத்தில் நல்ல வரவேற்பை பெற்றாலும் இந்த விமான போக்குவரத்து நாளடைவில் வருமான இழப்பு ஏற்பட்டதால் குறுகிய காலத்திலேயே விமான சேவை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் வந்து பணிபுரிகின்றனர். அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு எளிதில் சென்றுவரும் வகையில் நிறுத்தப்பட்ட விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடந்த 2017ம் ஆண்டு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், தேசிய சிவில் விமான போக்குவரத்து கொள்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி குறைந்த கட்டணத்தில் ஏழை, எளிய மக்களும் விமான பயணம் மேற்கொள்ள, விமான போக்குவரத்து இணைப்பு திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த திட்டமிட்டது. கட்டுமான பணிகள் இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் நெய்வேலி, சேலம், ஓசூர், வேலூர் பகுதிகளில் இருந்து விமான சேவையை தொடங்க மத்திய அரசுடன், தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது. அதன் அடிப்படையில் நெய்வேலியில் என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் விமான தளம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு புனரமைக்கப்பட்டது. மேலும் 1,200 மீட்டர் ஓடுதளம், சுற்றுச்சுவர், பயணிகள் காத்திருப்பு அறை உள்ளிட்ட கட்டுமான பணிகள் நடந்து முடிந்தன. 
ஆனால், இப்பணிகள் நடந்து முடிந்து ஆண்டுகள் பல கடந்தாலும், அதனை செயல்படுத்த இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தபாடில்லை. 
இதுகுறித்து நெய்வேலி பகுதி மக்கள் கூறுகையில், நெய்வேலி பகுதி மக்கள் சென்னைக்கு செல்ல கடந்த காலங்களில் மிகவும் சிரமப்பட்டனர். சென்னைக்கு செல்லவேண்டுமானால் பேருந்து அல்லது கார்களில் தான் செல்ல வேண்டும். ரயில் வசதி கூட கிடையாது. ஏதேனும் அவசர தேவைக்கு கூட உடனடியாக செல்ல முடியாத நிலை இருந்தது. அதனால் மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நெய்வேலியில் இருந்து சென்னைக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டது. ஆனால் ஏதோ காரணத்தால் சில ஆண்டுகளிலேயே விமான சேவை நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மீண்டும் விமான சேவையை தொடங்க, விமான நிலையம் புனரமைக்கப்பட்டது. ஆனால் பணிகள் முடிந்தும், விமான சேவை மட்டும் தொடங்கவில்லை. இதனால் நெய்வேலி மட்டுமல்லாது கடலூர் மாவட்ட மக்கள் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு ஏதேனும் அவசர தேவைக்கு கூட உடனடியாக செல்ல முடியாத நிலை உள்ளது. அதனால் நெய்வேலியில் நிறுத்தப்பட்ட விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்றனர்.
நெய்வேலியில் உள்ள விமான நிலையத்தில், தகவல் தொடர்பு, ஊடுருவல் கண்காணிப்பு மற்றும் விமானப் போக்குவரத்து மேலாண்மை போன்ற சேவைகளை வழங்குவதற்காக, என்எல்சி இந்தியா நிறுவனம் மற்றும் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணைக்குழு ஆகியவற்றுக்கிடையே, 2023 ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடந்த ஒரு நிகழ்வில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுவரை விமான சேவை வழங்கப்படாத மற்றும் குறைவான அளவில் விமான சேவைகள் தேவைப்படுகின்ற பிராந்தியங்களுக்கு இடையிலான விமான இணைப்பை மேம்படுத்துவதற்காக, 'பிராந்திய இணைப்புத் திட்டத்தின் கீழ்' இது செயல்படுத் தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், நெய்வேலி மற்றும் கடலூர் மக்களின் நீண்டநாள் கனவான நெய்வேலியில் இருந்து விமான போக்குவரத்து  விரைவில் தொடங்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. அடுத்து எத்தனை தடை வந்தாலும் விமான சேவையை தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.  

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டின்  பொருளாதாரத்தை சார்ந்தே இருக்கும். ஆனால், அந்த      பொருளாதாரம் அந்த நாட்டின் போக்குவரத்தை அடிப்படையாக கொண்டே அமைகிறது. அனைத்திலும் வளர்ச்சியடைந்தும்     போக்குவரத்து குறைபாடு உள்ளது என்றால் பொருளாதாரம் வளர்ச்சியடையாமல் வீழ்ச்சியை சந்திக்கும். அதுமட்டுமல்ல, மக்களின் அடிப்படை தேவைகளில் போக்குவரத்து மிகவும்  இன்றியமையாதது.

அனைத்து வகை போக்குவரத்து வசதிகளும் உள்ள ஒரு நாடு மிக விரைவில் வளர்ச்சியடையும்.  அதுமட்டுமின்றி எங்கோ கடைகோடியில் உள்ள கிராமங்களை கூட நகரத்தோடு இணைப்பதில் பெரும் பங்கு வகிப்பது     போக்குவரத்துதான் என்றால் அதில் மிகையில்லை. 

பொருளாதாரம் சார்ந்த வாய்ப்புகளுக்காக மக்கள் பெருநகரங்களை தேடிச்செல்ல தொடங்கியுள்ளனர்.   அப்படி மக்கள் இடம்பெயர சென்றுவர பேருந்து, ரயில் உள்ளிட்ட சேவைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதற்கு அடுத்தபடியாக மக்கள் அதிகம் பயன்டுத்துவது விமான போக்குவரத்தையே. 

என்றாவது ஒருநாள் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்கிற கனவு ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும். அப்படி நீண்டகால கனவுகளுடன் இருப்பவர்கள் தான் கடலூர் மாவட்ட மக்கள். கடலூர் மாவட்டத்தில் உள்ளது நெய்வேலி. இங்கு பழுப்பு நிலக்கரி சுரங்கம், அனல் மின் நிலையம் ஆகியவை செயல்படுகின்றன. கடலூர் மாவட்டத்திலேயே மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நகரம் நெய்வேலி. மேலும், மாவட்டத்திலேயே முதல் விமான போக்குவரத்து நடந்ததும் இங்கு தான்.

முதல் விமான போக்குவரத்து

கடந்த 1987-ம் ஆண்டு சென்னையில் இருந்து நெய்வேலிக்கு குட்டி ரக விமானங்களை ("வாயுதூத்") இயக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்தது. அதற்காக நெய்வேலி டவுன்ஷிப் அருகில் சுமார் 220 ஏக்கர் பரப்பளவில் இந்த விமான நிலையம் கட்டமைக்கப்பட்டது. இதையடுத்து சென்னைக்கும், நெய்வேலிக்கும் இடையே கடந்த 8.6.1987 அன்று முதன் முறையாக குட்டி விமான போக்குவரத்து தொடங்கியது. 

இதையடுத்து சென்னையில் இருந்து நெய்வேலிக்கு ஞாயிற்றுக்கிழமைகள் தவிர பிற எல்லா நாட்களிலும் குட்டி விமானம் இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து நெய்வேலிக்கு வெறும் 45 நிமிட பயணம் என்பதால், வசதி படைத்த பலர் குட்டி விமானத்தில் பயணம் மேற்கொள்ளவே அதிக ஆர்வம் காட்டினர். இது கார், பேருந்து உள்ளிட்டவற்றில் பயணிப்பதை விட குட்டி விமானத்தில் செல்வதால் சுமார் 4 மணி நேரம் மிச்சமானது.

ஆனால், அந்த விமானத்தில் ஒரே நேரத்தில் 19 பேர் மட்டுமே பயணம் செய்யலாம். இந்த விமான சேவை  ஆரம்பத்தில் நல்ல வரவேற்பை பெற்றாலும் இந்த விமான போக்குவரத்து நாளடைவில் வருமான இழப்பு ஏற்பட்டதால் குறுகிய காலத்திலேயே விமான சேவை நிறுத்தப்பட்டது.

அதன்பிறகு நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் வந்து பணிபுரிகின்றனர். அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு எளிதில் சென்றுவரும் வகையில் நிறுத்தப்பட்ட விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், தேசிய சிவில் விமான போக்குவரத்து கொள்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி குறைந்த கட்டணத்தில் ஏழை, எளிய மக்களும் விமான பயணம் மேற்கொள்ள, விமான போக்குவரத்து இணைப்பு திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த திட்டமிட்டது.

கட்டுமான பணிகள் இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் நெய்வேலி, சேலம், ஓசூர், வேலூர் பகுதிகளில் இருந்து விமான சேவையை தொடங்க மத்திய அரசுடன், தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது. அதன் அடிப்படையில் நெய்வேலியில் என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் விமான தளம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு புனரமைக்கப்பட்டது. மேலும் 1,200 மீட்டர் ஓடுதளம், சுற்றுச்சுவர், பயணிகள் காத்திருப்பு அறை உள்ளிட்ட கட்டுமான பணிகள் நடந்து முடிந்தன. ஆனால், இப்பணிகள் நடந்து முடிந்து ஆண்டுகள் பல கடந்தாலும், அதனை செயல்படுத்த இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தபாடில்லை. 

கடலூர் மாவட்ட மக்கள் கோரிக்கை 

இதுகுறித்து நெய்வேலி பகுதி மக்கள் கூறுகையில், நெய்வேலி பகுதி மக்கள் சென்னைக்கு செல்ல கடந்த காலங்களில் மிகவும் சிரமப்பட்டனர். சென்னைக்கு செல்லவேண்டுமானால் பேருந்து அல்லது கார்களில் தான் செல்ல வேண்டும். ரயில் வசதி கூட கிடையாது. ஏதேனும் அவசர தேவைக்கு கூட உடனடியாக செல்ல முடியாத நிலை இருந்தது.

அதனால் மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நெய்வேலியில் இருந்து சென்னைக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டது. ஆனால் ஏதோ காரணத்தால் சில ஆண்டுகளிலேயே விமான சேவை நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மீண்டும் விமான சேவையை தொடங்க, விமான நிலையம் புனரமைக்கப்பட்டது. ஆனால் பணிகள் முடிந்தும், விமான சேவை மட்டும் தொடங்கவில்லை. இதனால் நெய்வேலி மட்டுமல்லாது கடலூர் மாவட்ட மக்கள் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு ஏதேனும் அவசர தேவைக்கு கூட உடனடியாக செல்ல முடியாத நிலை உள்ளது. அதனால் நெய்வேலியில் நிறுத்தப்பட்ட விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்றனர்.

ஒப்பந்தம் கையெழுத்தானது

நெய்வேலியில் உள்ள விமான நிலையத்தில், தகவல் தொடர்பு, ஊடுருவல் கண்காணிப்பு மற்றும் விமானப் போக்குவரத்து மேலாண்மை போன்ற சேவைகளை வழங்குவதற்காக, என்எல்சி இந்தியா நிறுவனம் மற்றும் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணைக்குழு ஆகியவற்றுக்கிடையே, 2023 ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடந்த ஒரு நிகழ்வில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுவரை விமான சேவை வழங்கப்படாத மற்றும் குறைவான அளவில் விமான சேவைகள் தேவைப்படுகின்ற பிராந்தியங்களுக்கு இடையிலான விமான இணைப்பை மேம்படுத்துவதற்காக, 'பிராந்திய இணைப்புத் திட்டத்தின் கீழ்' இது செயல்படுத் தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், நெய்வேலி மற்றும் கடலூர் மக்களின் நீண்டநாள் கனவான நெய்வேலியில் இருந்து விமான போக்குவரத்து  விரைவில் தொடங்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. அடுத்து எத்தனை தடை வந்தாலும் விமான சேவையை தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.  

 

by Kumar   on 11 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி. இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி.
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.