LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

சூரியனை படம்பிடித்த ஆதித்யா விண்கலம் - இஸ்ரோ தகவல்

ஆதித்யா விண்கலத்தின் சூட் தொலைநோக்கி மூலம் வெவ்வேறு அலைநீளங்களில் எடுக்கப்பட்ட சூரியனின் படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
*****************************
சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும் நவீன விண்கலத்தை இந்தியவிண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த செப்டம்பர்2-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இது பல்வேறுகட்ட பயணங்களை கடந்து சூரியனின் எல்-1 பகுதியைநோக்கி சீரான வேகத்தில் பயணித்து வருகிறது. அதற்கான சுற்றுப்பாதையை விண்கலம் ஜனவரி முதல் வாரத்தில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆதித்யா விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
***************************************
7 ஆய்வுக் கருவிகள்
************************
 அதன்விவரம் வருமாறு;- ஆதித்யா விண்கலத்தில் மொத்தம் 7 ஆய்வுக் கருவிகள் உள்ளன. இதில் ஹெல்1ஒஎஸ், ஏபெக்ஸ் ஆகிய சாதனங்கள்கடந்த அக்டோபர், செப்டம்பர் மாதங்களில் ஆய்வுப் பணிகளை தொடங்கி தரவுகளை வழங்கி வருகின்றன. தொடர்ந்து சூட் (The Solar Ultraviolet Imaging Telescope-SUIT) எனும் மற்றொரு தொலைநோக்கி கருவியானது நவம்பர் 20-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இது சூரியனின் முதல் 2 அடுக்குகளான போட்டோஸ்பியர் மற்றும் குரோமோஸ்பியரில் இருந்து வெளிவரும் புறஊதா கதிர்கள் மற்றும் கதிர் வீச்சு மாறுபாடுகள் குறித்து ஆராய்ந்து வருகிறது.
******************************
இதற்கிடையே சூட் தொலைநோக்கி வாயிலாக 200 முதல் 400 நானோ மீட்டர் வரையான வெவ்வேறுஅலைநீளங்களில் எடுக்கப்பட்ட முழுமையான புகைப்படங்களின் தொகுப்பு இஸ்ரோ இணையத்தில் (/www.isro.gov.in/) வெளியிடப்பட்டுள்ளது. இந்த படங்கள் டிசம்பர் 6-ம் தேதி எடுக்கப்பட்டவைகளாகும். இந்த தரவுகள் சூரியனின் போட்டோஸ்பியர், குரோமோஸ்பியர் பற்றிய சிக்கலான ஆராய்ச்சிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்

by Kumar   on 10 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி. இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி.
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.