LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்

‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் நடிகர் விஜய், புதிய கட்சி தொடங்கியுள்ளார். நெருங்கி வரும் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. இத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்துள்ள விஜய், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதுதான் இலக்கு என்று அறிவித்துள்ளார்.

 

விஜய் மக்கள் இயக்கம் சமீபகாலமாக அரசியல் நிகழ்வுகளில் அதிக ஆர்வம் காட்டி வந்தது. நடிகர் விஜய்யும் பல்வேறு அணி நிர்வாகிகளுடன் அவ்வப்போது ஆலோசனையில் ஈடுபட்டு, இயக்கம் சார்பில் பல புதிய திட்டங் களை செயல்படுத்தி வந்தார். இதன் தொடர்ச்சி யாக, கடந்த 25-ம் தேதி சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் மாநில பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டி, மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினர்.

 

இந்தக் கூட்டத்தில், விஜய் புதிய கட்சி தொடங்க இருப்பதாகவும், கட்சித் தலைவராக அவரே செயல்படுவார் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில், டெல்லியில் உள்ள இந்தியத் தேர்தல் ஆணைய தலைமை அலுவலகத்தில் கட்சியின் பெயரை விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் 02/01/2024 அன்று பதிவு செய்தார். அதன்படி, தேர்தல் ஆணையத்தில் விஜய்யின் கட்சிப் பெயர் ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கட்சியின் தலைவர் என்ற முறையில், நடிகர் விஜய் தனது முதல் அறிக்கையை l வெளியிட்டார்.

 

அதில் அவர் கூறியுள்ளதாவது: தற்போதைய அரசியல் சூழலில் நிர்வாக சீர்கேடுகள், ஊழல் மலிந்த கலாச்சாரம் ஒருபுறம் என்றால், நம் மக்களைச் சாதி மத பேதங்கள் வாயிலாகப் பிளவுபடுத்தத் துடிக்கும் பிளவுவாத அரசியல் கலாச்சாரம் மறுபுறம். இவ்வாறு இரு புறமும் நமது ஒற்றுமை, முன்னேற்றத்துக்கான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. என்னால் முடிந்த வரை, தமிழக மக்களுக்கு இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பது எனது நீண்டகால எண்ணம்.

 

 ‘எண்ணித் துணிக கருமம்’ என்பது வள்ளுவர் வாக்கு. அதன்படியே, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் எனது தலைமையில் அரசியல் கட்சி தொடங்கப்பட்டு, இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது. வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் விரும்பும் அடிப் படை அரசியல் மாற்றத்துக்கு வழிவகுப்பதுதான் நமது இலக்கு.

 

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்த பிறகு, வரும் மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்கு மான, எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடு கள், கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நமது அரசியல் பயணம் தொடங்கும்.

 

 

இடைப்பட்ட காலத்தில், கட்சித் தொண்டர்களை அரசியல்மயப்படுத்தி, அமைப்பு ரீதியாக அவர் களை தயார் நிலைக்குக் கொண்டுவரும் பணிகளும், கட்சியின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஜனநாயக முறையில் பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளும் தீவிரமாகச் செயல்படுத்தப்படும். கடந்த 25-ம் தேதி நடந்த பொதுக்குழுவில் கட்சியின் தலைவர், தலைமை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, கட்சியின் அடிப்படை சட்ட விதிகளுக்கு முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு பொதுக்குழு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

2024 மக்களவைத் தேர்தலில் நாம் போட்டியிடுவது இல்லை என்றும், இத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் பொதுக்குழு, செயற் குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார். விஜய் புதிய கட்சி தொடங்கியதை அடுத்து, தமிழகம், புதுச்சேரியில் உள்ள ரசிகர்கள்கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும், மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

சினிமாவிலிருந்து விலக முடிவு சென்னை

 

 ‘அரசியல் எனது பொழுதுபோக்கு அல்ல. அது என் வேட்கை. கட்சிப் பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில், நான் ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை முடித்துவிட்டு, முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன்’ என்று விஜய் தெரிவித்துள்ளார்.

 

சினிமாவிலிருந்து அரசியல்

 

தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் கடந்த 1992-ல் வெளியான ‘நாளைய தீர்ப்பு’ என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் விஜய். பல வெற்றிப் படங்களில் நடித்த அவர், அவ்வப்போது தனது நற்பணி மன்றம் மூலம் மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வந்தார். பின்னர், நற்பணி மன்றத்தை இயக்கமாக மாற்றினார்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக, 2011-ல் நாகப்பட்டினத்தில் பொதுக் கூட்டம் கூட்டினார் விஜய். இக்கூட்டத்தில், தமிழகம் முழுவதிலும் இருந்து ரசிகர்கள் லட்சக்கணக்கில் திரண்டது, திரையுலகில் மட்டுமின்றி அரசியல் கட்சிகள் மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியது.

by Kumar   on 06 Feb 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம். ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம்.
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.