ஷங்கர் இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள ஐ படத்தின் படபிடிப்புகள் முடிவடைந்து பொங்கல் ரிலீசுக்கு தயாராகியுள்ளது, இந்நிலையில் நடிகர் விக்ரம், விஜய் மில்டன் இயக்கத்தில், பத்து எண்றதுக்குள்ள என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறாராம். இந்த படத்தின் வில்லனாக வேலாயுதம், தலைவா போன்ற படங்களில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் அபிமன்யு சிங் நடிக்கிறாராம். இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அபிமன்யு, மேலும் பேசும் போது, வேலாயுதம் படம் மூலம் தமிழ்ப் பட வாய்ப்பு கிடைத்தது.
தமிழில் நான் விக்ரம் நடிப்புக்கு ரசிகன். அவரை சந்திக்காத வரை அவரை மிகவும் முரட்டுத்தனமானவர் என நினைத்தேன். ஆனால், நேரில் சந்தித்த பிறகு விக்ரம் சிறந்த மனிதர் என்பதைப் புரிந்து கொண்டேன் .
விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘பத்து எண்றதுக்குள்ள' படத்தில் எனது பங்கும் இருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்'' என தெரிவித்துள்ளார்.
|