LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

கிரையோஜெனிக் என்ஜின் சோதனையில் வெற்றி பெற்றுள்ள ககன்யான் திட்ட விண்கலம்

கிரையோஜெனிக் என்ஜின் சோதனையில் வெற்றி பெற்றுள்ள ககன்யான் திட்ட விண்கலம்

விண்வெளிக்கு மனிதரை அனுப்புவதற்கான இந்தியாவின் கனவு திட்டமே ககன்யான். மூன்று வீரர்கள் பூமியின் தாழ் சுற்றுவட்டப் பாதைக்கு சென்று, ஏழு நாட்கள் ஆய்வுகள் மேற்கொண்டு, பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது. ககன்யான் திட்ட விண்கலம் வடிவமைக்கப்பட்டு பல்வேறு சோதனைகள் முடிவுற்றுள்ளன. தற்போது அவ்விண்கலத்தைச் செலுத்தும் இராக்கெட்டிற்கான கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றியடைந்துள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.இச்சோதனை நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றுள்ளது.

கிரையோஜெனிக் என்ஜின் என்பது உறைநிலையில் உள்ள எரிபொருட்கள் கொண்டு இயங்குகிறது. திரவ ஹைட்ரஜன் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.விண்வெளியில் ஆக்சிஜன் இல்லை என்பதால் எரிவதற்கு துணை புரியும் திரவ ஆக்சிஜன் உடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. இந்த என்ஜினின் செயல்பாடு சிக்கலானதாகும். இந்த எரிபொருள்களை கையாள்வதும் கடினமாகும். எனவே இவ்வெற்றி முக்கியமானது.மேலும் விண்கலத்தினை செலுத்துவதற்கான கடைசி கட்ட சோதனையாகவும் இது உள்ளது.

இவ்விண்கலத்தில் பயணிக்கும் வீரர்கள் ரஷ்யாவில் பயிற்சி பெற இருக்கின்றனர். 2024 -ஆம் ஆண்டில் வீரர்களுக்கு முன் "வியோமா மித்ரா"என்ற பெண் ரோபோ இந்த விண்கலத்தில் பயணிக்க உள்ளது. இவ்விண்கலத்தில் வெற்றிகரமாக பயணித்து விண்வெளியில் ஆய்வு செய்து, வீரர்கள் தரையிறங்கும் நேரத்தில் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவை அடுத்து விண்வெளிக்கு வீரர்களை அனுப்பிய பெருமையை நம் இந்தியா பெறும்.

by R.Gnanajothi   on 19 May 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா! உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல். நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்.
நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு. நிலவில் நீர். சந்திரயான்-2 தரவுகளை உறுதிசெய்த புதிய ஆய்வு.
இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி. இந்தியாவின் ஸ்மார்ட்' ஏவுகணை சோதனை வெற்றி.
குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா. குறைந்த எடையில் மிக இலகுவான குண்டு துளைக்காத ஜாக்கெட் உருவாக்கியது இந்தியா.
அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம். அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-ஆவது இடம்.
சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. சப்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.
வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை. வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.